67

34. நிலையாமை - Instability
 

1. நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை.

Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!

331
 
 

2. கூத்துஆட்டு அவைக் குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அதுவிளிந்து அற்று.

As crowds round dancers fill the hall, is wealth's increase;
It's loss, as throngs dispersing, when the dances cease.

332
 
 

3. அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

333
 
 

4. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்

As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.

334
 
 

5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற் சென்று செய்யப் படும்

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.

335
 
 

6. நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு.

Existing yesterday, to-day to nothing hurled!-
Such greatness owns this transitory world.

336
 
 

7. ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!

337
 
 

8. குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short - lived friendship soul and body share.

338
 
 

9. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

Death is sinking into slumbers deep;
Birth again is walking out of sleep.

339
 
 

10. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?

340