| 1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் | From whatever, aye, whatever, man gets free, From what? aye, from that, no more of pain hath he!
| 341 | |
| 2. வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டு இயற்பால பல. | 'Renounciation' made -ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire,
| 342 | |
| 3. அடல்வேண்டும் ஐந்தன்புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு | 'Perceptions of the five' must all expire:- 'Relinquished in its order each desire.
| 343 | |
| 4. இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை; உடைமை மயல் ஆகும் மற்றும் பெயர்த்து. | 'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew.
| 344 | |
| 5. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை | To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?
| 345 | |
| 6. யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் | Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine.
| 346 | |
| 7. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு | Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp.
| 347 | |
| 8. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். | Who thoroughly 'renounce' on highest highest height are set; The rest, bewildered, lie entangled in the net.
| 348 | |
| 9. பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் | When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability.
| 349 | |
| 10. பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு | Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.
| 350 | |
|
|