4. அறன்வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue |
| 1. சிறப்புஈனும்; செல்வமும்ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு | It yields distinction, yields prosperity: what gain Greater than virtue can a living man obtain?
| 31 | |
| 2. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு | No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.
| 32 | |
| 3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய்எல்லாம் செயல். | To finish virtue’s work with ceaseless effort strive, What way thou may’st where’er thou see’st the work may thrive.
| 33 | |
| 4. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற | Spotless be thou in mind! This only merits virtue’s name; All else, mere pomp of idle sound, no real worth can claim.
| 34 | |
| 5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | ‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
| 35 | |
| 6. அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | Do deeds of virtue now, Say not, 'To-morrow we’ll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies.
| 36 | |
| 7. அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.. | Needs not in words to dwell on virtue’s fruits; compare The man in litter borne with them that toiling bear!
| 37 | |
| 8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் | If no day passing idly, good to do each day toil, A Stone ’t will be to block the way of future days of moil.
| 38 | |
| 9. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. | What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory’s light.
| 39 | |
| 10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | ‘Virtue’ sums the things that should be done; ‘Vice’ sums the things that man should shun.
| 40 | |
|
|