37. அவா அறுத்தல் - The Extirpation of Desire |
| 1. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. | The wise declare, through all the days, to every living thing, That ceaseless round of birth from seed of strong desire doth spring.
| 361 | |
| 2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். | If desire you feel, freedom from changing birth require! 'Twill come, if you desire to 'scape, set free from all desire.
| 362 | |
| 3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃது ஒப்பது இல். | No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire.
| 363 | |
| 4. தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் | Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow.
| 364 | |
| 5. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். | Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty.
| 365 | |
| 6. அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. | Desire each soul beguiles; True virtue dreads its wiles.
| 366 | |
| 7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான் வேண்டும் ஆற்றான் வரும். | Who thoroughly rids his life of passion- prompted deed, Deeds of unfailing worth shall do, which , as he plans, succeed.
| 367 | |
| 8. அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும். | Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide.
| 368 | |
| 9. இன்பம் இடைஅறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். | When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knows.
| 369 | |
| 10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். | Drive from thy soul desire insatiate; Straight way is gained the moveless blissful state.
| 370 | |
|
|