| 1. ஆகுஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி | Wealth - giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs.
| 371 | |
| 2. பேதைப்படுக்கும் இழ ஊழ் அறிவு அகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை | The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler power will wisdom bless.
| 372 | |
| 3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். | In subtle learning manifold though versed man be, The wisdom, truly his, will gain supremacy.
| 373 | |
| 4. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. | Two -fold the fashion of the world; some live in fortune's light; While other some have souls in wisdom's radiance bright.
| 374 | |
| 5. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்ல ஆவாம் செல்வம் செயற்கு. | All things that good appear will oft have ill success; All evil things prove good for gain of happiness.
| 375 | |
| 6. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. | Things not your own will yeild no good, howe'er you guard with pain; You own, however you scatter them abroad, will yours remain.
| 376 | |
| 7. வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. | Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be.
| 377 | |
| 8. துறப்பார் மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். | The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spare.
| 378 | |
| 9. நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால் அல்லல் படுவது எவன் | When good things come, men view them all as gain; When evils come, why then should they complain?
| 379 | |
| 10. ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று சூழினும்தான் முந்து உறும். | What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still.
| 380 | |
|
|