79
2. பொருட்பால் - Wealth 1. அரசியல் - Royalty |
39. இறைமாட்சி - The Greatness of a King |
| 1. படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. | An army, people wealth, a minister, friends, fort; six things- Who owns them all , a lion lives amid the kings.
| 381 | |
| 2. அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. | Courage, a liberal hand, wisdom, and energy; these four Are qualities a king adorn for evermore.
| 382 | |
| 3. தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு. | A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.
| 383 | |
| 4. அறன் இழுக்காது அல்லவை நீக்கிமறன் இழுக்கா மானம் உடையது அரசு. | Kingship, in virtue failing not , all vice restrains, In courage failing not, it honour's grace maintains.
| 384 | |
| 5. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. | A king is he who treasure gains, stores up, defends, And duly for his Kingdom's weal expends.
| 385 | |
| 6. காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லன்ஏல் மீக்கூறும் மன்னன் நிலம். | Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.
| 386 | |
| 7. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொல்லால் தான் கண்டனைத்து இவ்வுலகு. | With pleasant speech, who gives and guards with poweful liberal hand, He sees the world obedient all to his command.
| 387 | |
| 8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும். | Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people regins.
| 388 | |
| 9. செவி கைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ் தங்கும் உலகு | The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.
| 389 | |
| 10. கொடைஅளி செங்கோல் குடிஒம்பல் நான்கும் உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி. | Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal.
| 390 | |
|
|