| 1. அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல். | Like those at draughts would play without the chequered square, Men void of ample lore counsels of the learned share.
| 401 | |
| 2. கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்று அற்று. | Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.
| 402 | |
| 3. கல்லாதவரும் நனி நல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். | The blockheads too, may men of worth appear, If they can keep from speaking where the learned hear!
| 403 | |
| 4. கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் கொள்ளார் அறிவு உடையார். | From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not , though good they seem to show.
| 404 | |
| 5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்ஆடச் சோர்வு படும். | As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speakes discerned.
| 405 | |
| 6. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர் அனையர் கல்லாதவர். | 'They are'; so much is true of men untaught; But, like a barren field, they yield us nought.
| 406 | |
| 7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று | Who lack the power of subtle, large and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.
| 407 | |
| 8. நல்லார் கண்பட்ட வறுமையின் இன்னாதே கல்லார் கண்பட்ட திரு | To men unlearned, from fortune's favour greater evil springs, Than proverty to men of goodly wisdom brings.
| 408 | |
| 9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. | Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace.
| 409 | |
| 10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். | Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train.
| 410 | |
|
|