| 1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. | Wealth of wealth is acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent.
| 411 | |
| 2. செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். | When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need.
| 412 | |
| 3. செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. | Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share.
| 413 | |
| 4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. | Though learning none hath he,yet let him hear alway: In weakness this shall prove a staff and stay.
| 414 | |
| 5. இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் | Like staff in hand of him in slippery ground who strays, Are words from mouth of those who walk in righteous ways.
| 415 | |
| 6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். | Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity.
| 416 | |
| 7. பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர். | Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who 've learning's ample lessons heard.
| 417 | |
| 8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. | Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear.
| 418 | |
| 9. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. | 'Tis hard for mouth to utter gentle, modest word. When ears discourse of lore refined have never heard.
| 419 | |
| 10. செவியில் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். | His mouth can taste, but ear no taste of joy can give! what matter if he die, or prosperous live?
| 420 | |
|
|