9
2. இல்லறவியல் - Domestic Virtue |
5. இல்வாழ்க்கை - Domestic Life |
| 1. இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை | The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.
| 41 | |
| 2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை | To anchorites, to indigent, to those who’ve passed away, The man for household virtue famed is needful help and stay.
| 42 | |
| 3. தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை | The manes, God. Guest, Kindred, self, in due degree These Five to cherish well is chiefest charity.
| 43 | |
| 4. பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் இல்வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். | Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.
| 44 | |
| 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.
| 45 | |
| 6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன். | If man in active household life a virtuous soul retain, What fruit from other modes a virtue can he gain?
| 46 | |
| 7. இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை | In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.
| 47 | |
| 8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து | Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.
| 48 | |
| 9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. | The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.
| 49 | |
| 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் | Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
| 50 | |
|
|