46. சிற்றினம் சேராமை - Avoiding mean Associations |
| 1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றம் ஆச்சூழ்ந்து விடும். | The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear.
| 451 | |
| 2. நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு. | The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show.
| 452 | |
| 3. மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல். | Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known.
| 453 | |
| 4. மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு இனத்து உளதுஆகும் அறிவு. | Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find.
| 454 | |
| 5. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். | Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near.
| 455 | |
| 6. மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லை நன்றுஆகா வினை. | From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds.
| 456 | |
| 7. மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். | Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain.
| 457 | |
| 8. மனநலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. | To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong.
| 458 | |
| 9. மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. | Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong;
| 459 | |
| 10. நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீஇனத்தின் அல்லல் படுப்பதூஉம் இல். | Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe.
| 460 | |
|
|