47. தெரிந்து செயல்வகை - Acting after due Consideration |
| 1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். | Expenditure, return,and profit of the deed In time to come; weigh these-than to the act proceed.
| 461 | |
| 2. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாது ஒன்றும் இல். | With chosen friends deliberate; next use the private thought; Then act.by those who thus proceed all works with ease are wrought.
| 462 | |
| 3. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவு உடையார். | To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain.
| 463 | |
| 4. தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். | A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear.
| 464 | |
| 5. வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதுஓர் ஆறு. | With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow!
| 465 | |
| 6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். | 'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring.
| 466 | |
| 7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. | Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we’ll think.; disgraced shall be.
| 467 | |
| 8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும். | On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive.
| 468 | |
| 9. நன்று ஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவர்அவர் பண்புஅறிந்து ஆற்றாக் கடை. | Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid.
| 469 | |
| 10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. | Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise.
| 470 | |
|
|