49. காலம் அறிதல் - Knowing the fitting Time |
| 1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. | A crow will conquer owl in broad daylight; The king that foes would crush needs fitting time to fight. | 481 | |
| 2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. | The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid. | 482 | |
| 3. அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். | Can any work be hard in very fact, If men use fitting means in timely act?
| 483 | |
| 4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். | The pendant world's dominion may be won, In fitting time and place by action done.
| 484 | |
| 5. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். | Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must wait.
| 485 | |
| 6. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. | The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.
| 486 | |
| 7. பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | The glorious once of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glow.
| 487 | |
| 8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. | If foes' detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy, the head lies there.
| 488 | |
| 9. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். | When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be done.
| 489 | |
| 10. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. | As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
| 490 | |
|
|