145 71. குறிப்பறிதல் - Divining the mind | | |
1. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி | Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world.
| 701 | | |
2. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். | Take him as God who reads the thought Of another man without a doubt. | 702 | | |
3. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். | By sign who scans the sign admit At any cost in cabinet.
| 703 | | |
4. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. | Untold, he who divines the thought Though same in form is quite apart.
| 704 | | |
5. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். | Among senses what for is eye If thought by thought one can't descry?
| 705 | | |
6. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். | What throbs in mind the face reflects Just as mirror nearby objects.
| 706 | | |
7. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். | Than face what is subtler to tell First if the mind feels well or ill.
| 707 | | |
8. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். | Just standing in front would suffice For those who read the mind on face.
| 708 | | |
9. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். | Friend or foe the eyes will show To those who changing outlooks know.
| 709 | | |
10. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்ணல்லது இல்லை பிற. | The scale of keen discerning minds Is eye and eye that secrets finds.
| 710 | | |
|