916. | தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் |
| புன்னலம் பாரிப்பார் தோள். |
|
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார். |
917. | நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் |
| பேணிப் புணர்பவர் தோள். |
|
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். |
918. | ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப |
| மாய மகளிர் முயக்கு. |
|
வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட "மோகினி மயக்கம்" என்று கூறுவார்கள். |
919. | வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் |
| பூரியர்கள் ஆழும் அளறு. |
|
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் "நரகம்" எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை. |
920. | இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் |
| திருநீக்கப் பட்டார் தொடர்பு. |
|
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரை விட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும். |