936. | அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் |
| முகடியான் மூடப்பட் டார். |
|
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள். |
937. | பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் |
| கழகத்துக் காலை புகின். |
|
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். |
938. | பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் |
| தல்லல் உழப்பிக்கும் சூது. |
|
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது. |
939. | உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் |
| அடையாவாம் ஆயங் கொளின். |
|
சூதாட்டத்திற்கு அடிமை யாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும். |
940. | இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் |
| உழத்தொறூஉம் காதற் றுயிர். |
|
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான். |