பக்கம் எண் :

21
 

(வி-ம்.)கூற்றுவன் கருத்தாயிருக்கி றானென்பதற்கு ‘ஆட் பார்த்து' எனவும், அதுவே வேலையாயிருக்கிறானென்பதற்கு ‘உழலும்' எனவும், கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு ‘அருள்இல்' எனவும், உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் ‘கூற்று' எனவும், அவன் என்றும் உள்ளான் என்பதற்கு ‘உண்மையால்' எனவும் , உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் ‘தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார். பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே ‘உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது. கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் ‘கள்ளம்' என்றார். தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா. மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார். "கூற்றங் கொண்டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின், ஆற்றுணாக் கொள்ளீர்," என்றார் சிந்தாமணியினும்,1 காலத்தாலேயே என்னுந் தேற்றேகாரமும், பீளையும் என்னும் இழிவு சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன.

(10)

3. யாக்கை நிலையாமை

(உடம்பின் நிலையாமையை உணர்த்துவது)

21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.

(பொ-ள்.)மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , நிலமிசை - இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -


1. சிந் : 6 : 136