பக்கம் எண் :

14

கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள்.புலை : தன்மையின் மேலது.முன்னர் : ஏழாவதன் இடப்பொருளில் வந்தது.

(8)

 9. கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.

(இ-ள்.)கள்வம் என்பார்க்கும் - திருடுவமென்று சோர்வு நேரம் பார்ப்பார்க்கும், காதலிமாட்டு - காதலியினிடத்தில், உள்ளம் வைப்பார்க்கும் - விருப்பம் வைத்திருப்பார்க்கும், ஒண்பொருள் - சிறந்த செல்வப்பொருளை, செய்வம் என்பார்க்கும் - பெருக்குவமென்று கருதி யுழைப் பார்க்கும், அப் பொருள் - தேடிய அப்பொருளை, காப்பார்க்கும் - களவாலும் பிறவாற்றாலுங் கெடாதபடி பாதுகாப்பவர்கட்கும், துயில் இல்லை -தூக்கம் பிடிப்பதில்லை.

(க-து.) திருடர்க்கும், தலைவிமாட்டு விருப்புற்ற தலைமகனுக்கும், பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும்தூக்கம் இராது.

(வி-ரை.) கள்வம், செய்வம்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்றுகள்.என்பார், வைப்பார், காப்பார்: வினையாலணையும் பெயர்கள்.உம்மை: எச்சவும்மைகள்.உள்ளம் - விருப்பத்தின் மேலது.பொருள் - தன்மையுடையார்க்கு ஏனையோரிடையில் விளக்கந் தரலின் ஒண்பொருளெனப்பட்டது, துயில் : முதனிலைத் தொழிற் பெயர்.

(9)

 10. கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்.

(இ-ள்.)கழிவு இரக்கம் - இழந்த பொருள்களுக்கு இரங்குதல், கற்றார்முன் தோன்றா - கற்றுணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து -ஊக்கங்கொண்டு