பக்கம் எண் :

15

ஒன்று உற்றார்முன் - ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர்பால், உறா முதல் - விரைவிற் கிட்டாமையாலாகிய முயற்சித்துன்பம், தோன்றா - தோன்றாது; தெற்றென - தெளிவாய், அல்ல புரிந்தார்க்கு - தீயவை செய்தார்க்கு, அறம் தோன்றா - நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் - எல்லா நன்மைகளும், வெகுண்டார்முன் - சினந்து கொள்வாரிடத்தில், தோன்றா கெடும் - தோன்றாவாய்க்கெட்டொழியும்.

(க-து.) கழிந்துவிட்ட பொருள்களைப்பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கமுடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளுஞ் சினந்தாரிடத்துந் தோன்றா.

(வி-ரை.) அவரவர் உளப் போக்குக்கு அவ்வவை எதிர்மாறாய் நிற்றலின், ‘தோன்றா' வெனப்பட்டது. கழிவு, முதல் : ஆகுபெயர்கள். முதல் மூன்றிடங்களிலுந் ‘தோன்றா' வென்பது துவ்வீறு தொக்க ஒன்றன் படர்க்கை எதிர்மறை வினைமுற்று.ஈற்றிலுள்ளது ‘தோன்றாக் கெடு' மென ஒற்று மிகாமையின், முற்றெச்ச மென்க. முதல் - ஒரு செயலை முடித்தற்கு ஏதுவாய் முதலில் நிகழும் முயற்சிப்பெருமையை யுணர்த்திற்று. அல்ல : குறிப்பு வினைப்பெயர். ‘தெற்றென' வென்றது, அறிந்துந் தீயவை புரிந்தாரென்றற்கு.

(10)

 11. நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை
நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.

(இ-ள்.)நெல்லும் கரும்பும் - நெற்பயிருங் கரும்பின் பயிரும், நிலத்துக்கு அணி என்ப - வயலுக்கு அழகென்று சொல்லுவர்; தாமரை-செந்தாமரைக் காடுகள், குளத்துக்கு அணி என்ப - குளங்களுக்கு அழகு என்று சொல்லுவர்; நாணம் - நாணுமியல்பு, பெண்மை நலத்துக்கு - பெண் (தன்மைக்குரிய) கற்பாகிய நன்மைக்கு, அணி என்ப - அழகென்று சொல்லுவர்; தான் செல் உலகத்து அறம் - தான் செல்லும் மறுமை யுலகத்துக்குத் துணையாகச்செய்யப்