பக்கம் எண் :

17

 13. கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக்1 கொளல்வேண்டும் - என்றும்
விடல்வேண்டுந் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கஞ் சிதைக்கும் வினை.

(இ-ள்.)கடிய - பிறர் செய்கின்ற அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை, கன்றாமை வேண்டும் - நினைந்து நினைந்து கறுவாமை வேண்டும்; பிறர் செய்த நன்றியை - பிறர் செய்யும் நன்மைகளை, நன்றா - பெரிதும், கொளல் வேண்டும் - நினைவிலிருத்தல் வேண்டும்: தங்கண் வெகுளி - தம்மிடம் உண்டாகும் பெருஞ் சினத்தை, என்றும் - எப்பொழுதும், விடல் வேண்டும் - நீக்குதல் வேண்டும்; ஆக்கம் - முற்போக்கை, சிதைக்கும் வினை - கெடுக்குந் தொழிலை, அடல் வேண்டும் -ஒழித்தல் வேண்டும்.

(க-து.) பிறர் செய்த தீமைகட்காக அவரைக் கறுவாமை வேண்டும்; ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும்; சினத்தை விடல்வேண்டும்;முற்போக்கைத் தடுக்குந் தவறான செயல்களைக் கெடுத்தல்வேண்டும்.

(வி-ரை.) கன்றல் - ஒன்றையே நினைத்து நினைத்துப் புழுங்குதல்; இங்குப் புழுங்கிச் செய்தவன்மேல் வயிரங் கொள்ளாமை வேண்டுமென்னுங் கருத்துப்பட வந்தது. ‘கன்றிக் கறுத்தெழுந்து' (அவையறிதல், 5)என்னும் நாலடியார் திருமொழியை உற்றுக் காண்க. கடிய : பலவின்பாற் படர்க்கைப் பெயர்.ஆக்கமென்பது ஆதல் என்னும் பொருளது; செல்வம், கல்வி, நல்லொழுக்கம், புகழ், இம்மை மறுமைப் பயன்களாகிய இவை யெல்லா வற்றிலும் மேலாதலே ஈண்டு ‘ஆக்க' மெனவும் அதற்குத் தடையாய்ச் சோம்பல் ஒழுங்கின்மை முதலியவற்றான் விளையுந் தீய செயல்களே ‘சிதைக்கும் வினை' யெனவுங் கூறப்பட்டன. ‘கொல்லா' என்னும் பாடத்துக்கு, ஒருவன் செய்த நன்றியை மறந்து அவனுக்கே தீங்கு செய்யாமல் என்க.

(13)

 14. பல்லினான் நோய்செய்யும்பாம்பெலாங் - கொல்லேறு2
கோட்டால் நோய்செய்யுங் குறித்தாரை ஊடி


(பாடம்) 1 கொல்லாக். 
2 கொல்களிறு.