பக்கம் எண் :

28

(இ-ள்.) நகை நலம் - முகமலர்ச்சியின் நன்மை, நாட்டார்கண் - நட்புச்செய்தார்பால், நந்தும் - சிறக்கும்; சிறந்த - மேலான, அவை நலம் - அவையின் நன்மை, அன்பின் விளங்கும் - அன்பினாற் சிறக்கும்; விசை மாண்ட - வேகம் மிகுந்த, தேர் நலம் - தேரின் நன்மை, பாகனால் - ஓட்டுபவனால்;பாடு எய்தும் - பெருமையடையும், ஊர் நலம் - குடிமக்களின் நன்மை, உள்ளானால் - அவ்வூரிலுள்ள அரசனால், உள்ளப்படும் -மதிக்கப்படும்.

(க-து.) முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும்; அவைகளின் நன்மை அன்பினால் விளங்கும்; விரைந்த செலவையுடைய தேரின் நன்மை பாகனால் பெருமைபெறும் : ஊரின் நன்மை அரசனுடையநற்செயல்களால் மதிக்கப்படும்.

(வி-ரை.) நகைநலமாவது, நேசரைக் கண்டவிடத்தே தம் முகத்திற் றோன்றும் புன்னகையுங் குளிர்ந்த பார்வையுங் கூடியமுகமலர்ச்சி. இஃது, உள்ளங் கலந்த உண்மை நண்பர் மாட்டன்றி மற்றவர்பால் வேறுபட்டுப் பொலிவு குன்றும். சிறந்த வென்பதை நலத்துக்குங் கூட்டுக. ‘அவைநல' மென்பது கற்றவர்கள் மற்றவர்கள்மேல் வைத்த அன்பினால் அரிய கருத்துக்களை எளியவாம்படி உளங்கொளக் கூறி யறிவித்தல். மாண்ட : மிகுதி மேனின்றது. ‘ஊர்நலம்' என்பதை, ‘நாட்டாக்க' மென்புழிக் (நான்மணிக்கடிகை, 18) கூறினமை கொண்டறிக. உள்ளான், குறிப்பால் அரசனுக்காயிற்று, உள்ளால் - நன்கு மதித்தல்; அறிவுடையோரால் என்க. நசைநலம் என்னும் பாடத்துக்கு விருப்பத்தின் நன்மை நண்பர்பாற் சிறக்குமென்க.அவர்களே அதனைநிறைவேற்றுபவராதலால்.

(26)

 27. அஞ்சாமை யஞ்சுதி 1ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை யெஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும்2 நாடாதி
நட்டார்கண் விட்ட வினை.

(இ-ள்.) அஞ்சாமை அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும் ஒழுக்கத்தை, அஞ்சுதி - நீ அஞ்சுவாய்; ஒன்றில் - ஒரு செயலில், தனக்கு ஒத்த - தனக்குக் கூடுமான, அளவு எல்லாம் - செயலளவுகளி லெல்லாம், எஞ்சாமை - பிறர்க்கு


(பாடம்) 1 அஞ்சுக. 
2 நாடாமை.