பக்கம் எண் :

29

உதவி செய்தலிற் குறையாமையாகிய ஒழுக்கத்தை, எஞ்சல் - குறைய விடாதே; நெஞ்சு அறிய - உள்ளமறிய, கோடாமை - ஒருபக்கங் கோணாமையாகிய ஒழுக்கத்தை, கோடி - கொள்ளுவாய்; பொருள் பெறினும்; பெரும் பொருள் பெறுவதானாலும், நட்டார்கண் - நண்பரது பொறுப்பில், விட்டவினை - செய்யவிட்ட தொழிலை, நாடாதி -ஆராயாதே.

(க-து.) அஞ்சுவது அஞ்சுக; இயன்றளவு உதவிசெய்வதிற் குறையாதே; ஒருபக்கங் கோணாதே; நண்பர்கள்பால் விட்டதொழிலை ஆராயாதே.

(வி-ரை) அஞ்சாமை பழிபாவங்கட்கு அஞ்சாமை; இவ்வியல்பு ஓராண்மையாகாமையின், இன்னோரன்னவற்றில்அஞ்சுதலே வேண்டற்பாலது. ‘தனக்கொத்த அளவெல்லா' மென்று கூட்டுக. எஞ்சல் : ஏவலொருமை எதிர்மறைவினைமுற்று.நாடாதியென்பதுமது. ‘கோடி' உடம்பாட்டேவல். கோடாமை யென்றது ஈண்டு நடுவு பிறழாமை. நட்டார்கண் விட்ட வினையை நாடின், அவர் வினையை நெகிழவிடுவர்; விடவே, இடருண்டாம், ‘தேர்ந்தபிற்றேறுக தேறும் பொருள்' ‘தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும்' (திருக்குள், தெரிந்து தெளிதல் 9, 10), கோடி - கொள் +த் + இ,எழுத்துப்பேறாக வந்த தகரம் டகரமாயது.

(27)

 28. அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம்.

(இ-ள்.) அலைப்பான் -கொன்று உண்பதற்காக, பிற உயிரை - பிற உயிர்களை, ஆக்கலும் குற்றம் - வளர்த்தலும் பிழையாகும்; விலைப்பாலின் - விலைகொள்ளும் வகையால், ஊன்கொண்டு - ஊனைப்பெற்று, மிசைதலும் குற்றம் - உண்ணலும் பிழையாகும்;சொலற்பால அல்லாத - சொல்லும் வகையினவல்லாதனவாகிய சொற்களை, சொல்லுதலும் குற்றம் - சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைப்பாலும் - கொலைவகைகளும், குற்றமே ஆம் - பிழையேயாகும்.