பக்கம் எண் :

31
வினைமுடிபைக் கொண்டன. ‘நோக்கி' வாழ்த லென்றது. இன்றியமையாமை கருதி. துளி, விளி : முதனிலைத் தொழிற்பெயர்.அளபெடைஇன்னிசை நிறைக்க வந்தது.

(29)

 30. கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
1புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.

(இ-ள்.) கற்ப - ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால், கழிமடம் - மிக்க அறியாமை, அஃகும் - குறையப்பெறுவான்; மடம் அஃக - அறியாமை குறைய, புற்கம் தீர்ந்து - புல்லறிவு நீங்கி, இவ்வுலகின் - இவ்வுலகத்தின், கோள் உணரும் - இயற்கையை யறிவான்;கோள் உணர்ந்தால் - அவ் வியற்கையை யறிந்துகொண்டால், தத்துவமான - உண்மையான, நெறி படரும் - அருணெறியிற் செல்வான்; அந் நெறி - அந் நெறியினால், இப்பால் உலகின் - இவ்வுலகின்கண் இசைநிறீஇ - புகழ் நிறுத்தி, உப்பால் மறுமையில், உயர்ந்த உலகம் புகும் - உயர்ந்த வீட்டுலகத்திற் புகுவான்.

(க-து.) ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை குறையப்பெறுவான்! அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக வியற்கையை யறிவான்; அறிய மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான்;செல்ல, இவ்வுலகத்திற் புகழைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

(வி-ரை.) ‘கழிமட' மென்றது, அறியாமையின் பெரும் பகுதி யென்றற்கு. கோள் - இங்குக் கொள்ளப்படுவதான உலக நிகழ்ச்சிகளின் கருத்து.‘இப்பாலுலகின்' என்பதை இம்மையில் இவ்வுலகத்திலென உரைப்பினுமாம். உப்பால் : அகரச் சுட்டின் சேய்மைப்பொருளது; ‘உப்பக்கங் காண்பர்' (திருக்குறள், ஆள் வினையுடைமை, 10) என்புழிப்போல, உயர்ந்த உலகம் - வீடு.இச்செய்யுள் ஐந்தடியான் வந்த பற்றொடை வெண்பா; காரணமாலையணி.

(30)


(பாடம்)1 புற்பந்.