பக்கம் எண் :

33

இல்லை - பிறிதில்லை; கற்றலின் யறிவைப்போல், வாய்த்த - உற்ற நேரத்திற் பயனாவன, பிற இல்லை - வேறு இல்லை; எற்றுள்ளும் - எதனுள்ளும், இன்மையின் - வறுமையைப்போல், இன்னாதது - துன்பமுடையது, இல்லை - வேறு யாதுமில்லை; இல் என்னாத - இரப்பார்க்கும் இல்லையென்னாத, வன்மையின் - மனவுறுதியைப் போல், வன்பாட்டது - திட்பமானது, இல் -வேறு இல்லை.

(க-து.) செல்வத்தைப்போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை: கல்வியைப்போல் துணையாவது பிறிதில்லை; வறுமையைப்போற் றுன்பமானது வேறில்லை;இல்லையென்னாமல் ஈதலைப்போல் திட்பமானது வேறில்லை.

(வி-ரை.) ‘இன்'உருபுகளை எல்லைப்பொருளில் உரைத்தலுமாம். வாய்த்த - பெயரெச்சப்பொருள் சிறவாமையின், பலவின் பாற் படர்க்கை வினையாலணையும் பெயரென்க. எற்று: குறிப்பு வினைப்பெயர். வறுமையுடையான் இம்மை மறுமை நலங்களிற் சிறிதும் நன்மை யுடையனாகாமையின், ‘இன்மையி னின்னாத தில்லை' யெனப்பட்டது. 'இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி, னின்மையே யின்னா தது' (திருக், நல்குரவு, 1) என்று திருவள்ளுவனாருங் கருதுகின்றமை காண்க.வன்மை ஈண்டுமனத் திட்பம்.வன்பாட்டது - வன்மையானது; கோட்பாடு இலம்பாடு என்பவற்றைப்போல வன்பாட்டென்பதும் பாடென்னுந் தொழிற் பெயர் விகுதிபெற்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர், ஈண்டுக் குறிப்பு வினைப்பெயரா யுரைத்தற்குப் பொருளியை யாமையின். அது : பகுதிப்பொருள் விகுதி. எக்காலத்திலும் இல்லையென்னாமை அரியவற்றுள் அரிதானமையின், அதனை யொப்பதொரு வன்மை பிறிதில்லையென்றார்.

ஒப்பாவன வின்மை கூறப்பட்டமையின்,மிக்கவின்மை கூறவேண்டாவாயிற்று.

(32)

 33. புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை-பகையொருவன்
முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும்.

(இ-ள்.) புகைவித்து ஆ - புகைச்சல் ஏதுவாக பொங்கு அழல் - எரிகின்ற நெருப்பினது இருப்பு, தோன்