பக்கம் எண் :

34

றும் - காண்பவர்கட்கு விளங்கும்; சிறந்த நகைவித்தா-மேலான முகமலர்ச்சி ஏதுவாக, உவகை தோன்றும் - மனமகிழ்ச்சி விளங்கும்; பகை - உள்ளத்தின் பகைமை, ஒருவன் - ஒருவனது, முன்னம் வித்தாக - குறிப்புச் செயல்கள் ஏதுவாக, முளைக்கும் - வெளியே தெரியும்; முளைத்தபின் - தெரிந்தபின், இன்னா - துன்பங்கட்கு, வித்து ஆகிவிடும் - அப் பகைமை ஏதுவாய்விடும்.

(க-து.) புகையின் ஏதுவாக நெருப்பு உணரப்படும்; முகமலர்ச்சியின் ஏதுவாக மனமகிழ்ச்சி யுணரப்படும்; குறிப்பு, சொல், செயல்களின் வாயிலாகப் பகை தெரியும், தெரிந்தபின் அப் பகைமைஏதுவாகத் துன்பங்களுண்டாகும்.

(வி-ரை.) ‘வித்து,' ஏதுவுக்கு வந்தது. ஒருவன் என்பதை பிறவற்றிற்குக் கூட்டலுமாம். முன்னம் - குறிப்பு; ‘முன்னம் முகத்தி னுணர்ந்தவர், (3) என்னும் புறநானூற்றிலும் இப் பொருண்மை காண்க. முன்னம் முகம்போல முன்னுரைப்பதில்' என்று இஃது இப் பொருளில் மேலும் வரும். ‘முளைக்கு' மென்னுஞ் சொற்கொடுத்துக் கூறினார், மறைவு வெளிப்படலின் இன்னா: பெயர். இன்னா வித்து - நான்காவது விரிக்க. உவகை - அகமகிழ்ச்சி; நகை -முகமலர்ச்சி.

(33)

 34. பிணியன்னர் பின்நோக்காப் பெண்டி ருலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் - 1பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் - கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத்தவர்.

(இ-ள்.) பின் - மேல் வருவதை, நோக்காப் பெண்டிர் - கருதிப் பாராத மகளிர், பிணி அன்னர் - கொண்டானுக்கு ஒரு நோயை யொப்பர்; அன்பு உடைமாக்கள் - எல்லா உயிர்களிடத்திலும் அன்புடைய நன்மக்கள், உலகிற்கு - உலகத்திற்கு, அணி அன்னர் - ஓர் அணிகலத்தையொப்பர்; புல் அறிவின் - சிற்றறிவுடைய, ஆடவர் - ஆண் மக்கள், பயிரின் - வளரும் பயிரினைச் சூழ்ந்த, பிணி புல் அன்னர் - வளர்ச்சியைத் தடுக்கும் களைப்புல்லோடு ஒப்பாவார்;


(பாடம்) 1 பிணிபயிலும், பிணிபேணும்.