ணமு முடையவளாதலின், ‘தாயிற் சிறந்த தமரில்லை' யென்றார். என் செயினும் : உம்மை உயர்வு சிறப்பினோடு எதிர்மறைக்கண் வந்தது. உயர்வு சிறப்பொன்றே கொண்டு, தமர்மே லேற்றி ‘என்ன நன்மை செய்தாலும்' எனவும் உரைக்கலாம். ஏனையழகுகள் குறைபட்டாலும் வளமைஅவற்றை நிறைவு செய்துயர்த்துமாகலின், ‘வளமையோடொக்கும் வனப்பில்லை' யெனவும், இளமை எல்லா வின்பங்களையும் நுகர்தற்கும், கல்வி முதலியவற்றைப் பெறுதற்கும், உடல் வலியுடைமைக்கும், நன்மைகளைச் செல்தற்கும் உரியதாகலின், ‘இளமையோ டொப்பதூஉ மில்' லெனவுங் கூறப்பட்டன. ‘வளமை' செல்வமென்னும் பொருடரல் வளப்பாத்தியுள்' (14) என முன் வந்ததனுள்ளுங் காண்க. அளபெடை இன்னிசை நிறைப்பது. ஓடு, இரண்டும் ஒப்புப் பொருளன. (35) 36. இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின் அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய பெரியரான் எய்தப் படும். (இ-ள்.) இரும்பின் - இரும்பினாற் செய்யப்பட்ட கருவிகளாலேயே, இரும்பு - இரும்பை, இடைபோழ்ப - குறுக்கே வெட்டுவர்; பெரும் சிறப்பின் - மிக்க சிறப்புடைய, நீர் உண்டார் - பாயசம் முதலிய நீருணவுகளை யுண்டவர்களும், நீரால் - நீர்கொண்டே, வாய் பூசுப - வாய் கழுவுவர்; தேரின் - ஆராய்ந்தால், அரிய - அரிய செயல்கள், அரியவற்றான் - அருமையான முயற்சிகளால், கொள்ப - முடித்துக் கொள்வர்; பெரிய - பெரிய பேறுகள், பெரியரான் - கல்வி கேள்விகளையுடைய தவப்பெரியோரால், எய்தப்படும் -அடையப்படும். (க-து.) இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்; சிறந்த நீருணவுகளை யுண்டார் நீரினால் வாய் கழுவுவார்; அரிய செயல்களை அரிய முயற்சிகளாற் கொள்வர்;பெரிய பேறுகளைப் பெரியோர் எய்துவர். (வி-ரை.) முதல் வந்தஇரும்பு, கருவியாகுபெயர். நீரென்றது, நீருடன் கூடிய சிறந்த உணவை யுணர்த்துகின்றமையின், ‘பெருஞ்சிறப்பி' னென்று அடைமொழி புணர்த்தார். அவ்வுணவு மிகுதிபற்றி நீரெனவே கூறப்பட்டது.பெருஞ்சிறப்பின்
|