முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். (இ-ள்.)மலர்க் கண்கள் - குவளை மலரைப் போன்ற கண்கள், மையால் - மையினால், தளிர்க்கும் - எடுத்துக் காட்டும் : மால் இருள் - மிக்க இருட்டில், நிமிர்சுடர் - நிமிர்ந் தெரியும் நெருப்பு, நெய்யால் - விளக்கெண்ணெயால், தளிர்க்கும் - விளங்கி யெரியும்; பெய்யல் - மேகம், முழங்க - பெய்தற்குக் குமுற, குருகு - குருக்கத்திமரம், இலை தளிர்க்கும் - இலைகள் துளிர்விடும்; மேல் மேலோர்கள்,நட்டார் வழங்க - உறவாயினார்க்குக் கொடுத்தலால், தளிர்க்கும் - மேலும் பொருளிற் பெருகுவர். (க-து.) கண்கள் மையிடுதலால் விளங்கும்; விளக்கு நெய்யாலெரியும்; குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும்; அடுத்தார்க்கு வழங்குதலால் ஆன்றோர் தளிர்ப்பர். (வி-ரை.) நிமிர்சுடர்-கொழுந்தோடி யெரியுந் தீச்சுடர். பெய்யல் : மேகத்துக்கானமையின் தொழிலாகுபெயர். ஈற்றடிக்கு, நண்பராயினார் பொருளுதவி செய்தலாற் கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோர் தமது தொண்டில் மேலும் மேம்படுவரென உரைப்பினுமாம். மேல் : பண்பாகு பெயர். ஆம் : ஆசை நிலை. (38) 39. நகைஇனிது நட்டார்நடுவண் பொருளின் தொகைஇனிது தொட்டு வழங்கின் - 1வகையுடைப் பெண்இனிது பேணி வழிபடின் - பண்இனிது பாடல் உணர்வார் அகத்து. (இ-ள்.) நகை - மகிழ்ச்சி, நட்டார் நடுவண், நண்பரிடையில், இனிது - இன்பமானது; பொருளின் தொகை - செல்வக் குவியல், தொட்டு வழங்கின் எடுத்து ஏழைகட்கு வழங்கப்பட்டால், இனிது - இன்பம் தருவதாம்;வகை உடைப் பெண் - வகையான பெண், பேணி வழிபடின் - கணவனைப் போற்றி அவன்வழி நின்றால், இனிது - இன்பந் தருபவளாவள், பண் - இசை, பாடல் உணர்வார் அகத்து - பாட்டை யுணரவல்லாரிடத்து, இனிது -இனிதாம்.
1 தகையுடைய.
|