பக்கம் எண் :

41

வோர், அவர் கன்னார், கொல்லர், சிற்பர், தச்சர், தட்டார் எனப்பலவகைப்படுவர். புலன் - ஈண்டு அறிவு. ‘முன்னிய வென்' பதற்குத் தேற்றேகாரங் கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க.

(41)

 42. திருவுந் திணைவகையான் நில்லாப் - பெருவலிக்
கூற்றமுங் கூறுவ செய்துண்ணா - தாற்ற
மறைக்க மறையாதாங் காமம் - முறையும்
இறைவகையான் நின்று விடும்.

(இ-ள்.) திருவும் - செல்வமும், திணை வகையால் - குடிப்பிறப்பு வகையால், நில்லா - பொருந்தி நில்லாவாம்; பெருவலி - மிக்க வலிமையுடைய, கூற்றமும் - நமனும், கூறுவ - தன்னாலுண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றை, செய்து உண்ணாது - செய்து உண்ணான்; ஆற்ற - மிகவும், மறைக்க - மறைவாக்க, காமம் - காமவியல்பு, மறையாது - மறைபடாது; முறையும் - ஆட்சி முறைமையும், இறைவகையான் - அரசனது போக்குக் கேற்றபடி, நின்றுவிடும் -அமைந்துவிடும்.

(க-து.) குடிவகைக் கேற்பச்செல்வம் நில்லா; கூற்றுவன் தன்னா லுண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றைக் கேளான்; மறைத்தாலும் காமம் மறையாது;அரசனது போக்குக்கேற்றபடி ஆட்சிமுறை அமைந்துவிடும்.

(வி-ரை.) திணை - ஈண்டுக் குடி; ‘வசையில் விழுத்திணைப் பிறந்த' (புறம், 159) என்புழிப்போல; குடியின் உயர்வுதாழ்வுக் கேற்பச் செல்வமும் மிகுந்துங் குறைந்தும் நில்லா வென்றற்குத் ‘திணைவகையா னில்லா' வெனப்பட்டது.செல்வம், செல்வாக்கு, செல்வநுகர்ச்சி யெனத் திரு பலவாகலின் நில்லாவெனப் பன்மையிற் கூறினார். எவர் வலிமையுங் கூற்றுவன் முன் செல்லாமையின், அவனுக்குப் பெருவலிமை யுரைக்கப்பட்டது. கூற்றம், பொருளாலுயர்திணைப் பெயர்.‘கூறுவ' வென்றது, துன்பஞ் செய்யாது கொடுபோ; இன்று திரும்பிப் போய்ப் பின்னொருகால் வா' என்பதற்கு ‘காம' மென்பதற்கும் எண்ணும்மை கூட்டுக. ஆம் : அசை நிலை. செல்வம், கூற்றம், காமம், அரசு என்பன தத்தம் இயற்கைப்படியே நடைபெறுமென்பது கருத்து.

(42)

 43. பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும்- நல்லாள்