உடம்படின் தானே பெருகுங் - கெடும்பொழுதில் கண்டனவுங் காணாக் கெடும். (இ-ள்.) உயிர் எனைத்தும் - உயிரெல்லாம், பிறக்குங்கால் - பிறக்கும்போது, பேர் எனவும் பேரா - உடலை விட்டு நீங்கென்றாலும் நீங்கா; இறக்குங்கால் - அவை இறக்கும்போது, நில் எனவும் நில்லா - இவ்வுடலிலேயே நில்லென்றாலும் நில்லா; நல்லாள் - திருமகள், உடன்படின் - கூடின், தானே பெருகும் - செல்வம் தானே பெருகும்; கெடும் பொழுதில் - அவள் நீங்கிப் போங்காலத்தில், கண்டனவும் - முன்பு காணப்பட்ட பொருள்கள் கூட, காணா - காணப்படாதன வாய் கெடும் -அழிந்துபோம். (க-து.) உயிர்கள் பிறக்கும்போது நீங்கென நீங்கா; இறக்கும்போது நில்லென நில்லா; திருமகள்கூடினாற் செல்வமும் கூடும்;அவள் நீங்கினால் அச் செல்வமும் நீங்கும். (வி-ரை.) ‘எனவு' மெனவந்த இரண்டும்மைகளும் எச்சம் ‘கண்எனவு' மென்றதும் அது; என்னை? மேன்மேற் பெருகுதல் கெடுதலேயன்றி முன்னாற் பெருகிக் கண்டனவுங் கெடுமென்றலின். ‘எனைத்து' மென்பது முற்றும்மை; முழுமையுமென்னும் பொருளுணர்த்திற்று. உடம்படின் - உடம்பட்டுச் சேரினென்க. காணா: முற்றெச்சம். எனை - எத்தனை என்பதன் மரூஉ. (43) 44. போரின்றி 1வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய் மடையின்றி நீள்நெய்தல் வாடும்படையின்றி மன்னர்சீர் வாடி விடும். (இ-ள்.) பொருநர் சீர் - போர்வீரரின் சிறப்பு : போர் இன்றி - போரில்லாவிடின், வாடும் - குன்றும்; மரம் எல்லாம் - எல்லா மரங்களும், கீழ் வீழ்ந்த - நிலத்துள் இறங்கிய, வேர் இன்றி - வேர் அறுந்துவிடின், வாடும் - பட்டுப்போம்; நீள் நெய்தல் - நீண்ட நெய்தல் மலர்கள், நீர் பாய்மடை - நீர்பாயும் மடையில், இன்றி - நீர் அற்று விட்டால், வாடும் - உலரும்; மன்னர் சீர் - அரசரது செல்வம், படையின்றி - படையில்லாவிடின் வாடிவிடும் -அழிந்துபோம்.
1 ‘இன்றி' என வரும் பாடங்கள் ‘அறின்' எனவும் வரும்.
|