பக்கம் எண் :

44

யெனப்பட்டான்; தாய்க்கும் இதனைக் கூட்டிக் கூறுக. முன் செய்த நல்வினை இப் பிறப்பில் இன்பங்களைச் சிறிதளவுந் தவறாமல் உடனிருந்து ஊட்டலின், அது தாயெனப்பட்டது. தாயென்னுங் குறிப்பால் ‘வினை' நல்வினைக் காயிற்றென்க.‘தாயென்பாள்.......வினை' என்பது திணைவழுவமைதி. மேதக்க - மேன்மைதரு என்பதன் மரூஉவாகிய ‘மேதகு' பகுதி; ஒற்றிரட்டிக் காலங் காட்டி விகுதிபெற்றது;உகரக்கேடு சந்தி.

(45)

 46. பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்
நண்பினார் நண்பு கெடும்.

(இ-ள்.) நாண் அற்ற போழ்தே - ஒருவனுக்கு நாணமென்பது நீங்கினபோதே, பொறி கெடும் - செல்வம் அழியும்; நெறி பட்ட - தன்வழிப்பட்ட, ஐவரால் - ஐம்பொறிகளால், வினைதானே கெடும் - தீவினைகள் தாமாகவே ஒழியும்; நீர் அற்ற - நீரைப் பெறாத, பைங்கூழ் - பசும்பயிர்கள், பொய்யா - பொய்க்காத, நலம் கெடும் - விளைவின் நன்மை கெட்டொழியும்; நலம் மாறின் - நண்பின் நலம் மாறினால், நண்பினார் நண்பு - நண்பரின் நட்பியல்பு, கெடும் -கெட்டுப்போம்.

(க-து.) நாணம் நீங்கினாற் செல்வங் கெடும்; ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் வினை கெடும்; நீரற்றாற் பசும் பயிர்களின் விளைவின் நலம் கெடும்; நன்மை மாறினால்நட்புக் கெடும்.

(வி-ரை.) ‘பொறி கெடும் நாணற்ற போழ்தே' என்பதைக் கயிறற்றபோதே பாவை கெடுமென் றுரைப்பாரு முளர்.நெறிபட்ட ஐவராலென்பதை ஐவர் நெறிபட்டாலென மாறுக. நெறிபடல் - தன்வழிப்படல்; எதுகை நோக்கிப் பகரவொற்றுத் தொக்கது.வினை, ஈண்டுப் பிறவிக்கு ஏதுவான தீவினை. தானே என்பதனால் முயற்சியின்றியே கெடுமென்பார், பயிர்க்குப் பெய்யா நலமென்பது, நீர் பாய்ச்சி முறையாய்ப் பயிரிட்டால் அது சிறிதுந் தவறாமற் றருங் கதிர் முதலிய விளைபொருட் பயன்களென்க.நண்பர்க்கு நலமாவது.உற்றுழியுதவலாம்; 'உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே, யிடுக்கண் களைவதாம் நட்பு' (நட்பு, 8) என்னும் திருக்குறள் திருமொழியை நினைவுகூர்க.போழ்து-பொழுது என்பதன் மரூஉ; போது எனவும் வரும்.

(46)