மழையும் - அம்மழை தானும், தவம் இலார் - தவஞ் செய்தலில்லாதவர்கள், இல்வழி - இருப்பிடங்களில், இல்லை - பெய்தலில்லை; தவமும் - அவ் வியல்பினதான தவஞ்செய்தலும், அரசன் இலாவழி - செங்கோலரசன் இல்லாதவிடத்து, இல்லை - நிகழ்தலில்லை; அரசனும் - அச்செங்கோலரசனும், இல்வாழ்வார் - குடிமக்கள்; இல்வழி - இல்லாதவிடத்து, இல் -இலனாவான். (க-து.) மழையில்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம் மழையுந் தவமுடையா ரில்லாதவிடத்துப் பெய்தலில்லை; அத் தவஞ் செய்தலும் முறையான அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை; அவ்வரசனுங் குடிகளில்லாதவிடத்தில் இருப்பதில்லை. (வி-ரை.) ‘தவமிலா' ரென்பதைத் தவமுடையாரென்றுரைப்பாருமுளர். ‘தவமிலா ரில்வழி' யென்பதில், இல், இருப்பிடத்தை யுணர்த்திற்று, ‘இல்வழிப் படூஉம் காக்கை' (அகம் - 313) என்புழிப்போல. உலகத்திலுள்ள எல்லா நலங்களுங் குடி மக்களான இல்வாழ்வாரால் விளைதலின், ஏனைய மூன்று கருத்துகட்கும் அவரை ஏதுவாக உரைத்தார். ‘வாழ்க்கை' என்பதே உலகத்தில் இல்வாழ்வார்க்கே உரியதாதல் நினைவு கூர்தற்குரியது. (49) 50. போதினான் 1 நந்தும் புனைதண்தார் மற்றதன் தாதினான் நந்துஞ் சுரும்பெல்லாந் - தீதில் வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம் நனையினான் நந்தும் நறா. (இ-ள்.) புனை தண் தார் - தொடுக்கப்படுங் குளிர்ந்த மாலை, போதினால் - பூக்களால், நந்தும் - மிக்கு விளங்கும்; சுரும்பு எல்லாம் - வண்டுகளெல்லாம், அதன் தாதினால் - அப் பூக்களின் தேனால், நந்தும் - மிக்குப் பொலியும்; மக்களும் - உலகத்து மக்களும், தீது இல் வினையினால் - குற்றமில்லாத நற்செய்கைகளால், நந்துவர் - உயர்வடைவர்; நறா - தேன் வகைகள், தத்தம் - தாந்தா மிருக்கும்,
(பாடம்)1 பூவினான்.
|