நனையினால் - பூவரும்பின் வகையினால், நந்தும் - பெருகிநல்லனவாம். (க-து.) மாலை பூவினால் விளங்கும்; வண்டுகள் அப்பூவிலுள்ள தேனாற் பொலியும்; மக்கள் நற்செய்கைகளால் உயர்வர்; தேன் தாந்தா மிருக்கும் மலர்வகைக் கேற்பப் பெருகிஇனியவாம். (வி-ரை.) நந்துதல் உயர்தலையும் விளங்குதலையும் உணர்த்தின. இதற்கு இவ் விருபொருளினுண்மையை முறையே ‘கான நந்திய செந்நிலப் பெருவழி' (98) என்னும் முல்லைப் பாட்டினாலும் - ‘பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்த' (316)என்னும் ஐங்குறு நூற்றினாலு மறிந்துகொள்க. தாது, தேன் என்னும் பொருட்டாதலை ‘ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்குங் காந்தள்' (152) என்னும் பட்டினப்பாலையிற் காண்க. தாது - மகரந்தமுமாகும். வினை - ஈண்டுச் செயல்; தத்தம் ‘நனையி'னா லென்றது, தேன் தானிருக்கும் பூவின் செழுமைக்கும் வகைக்கும் ஏற்பப் பெருகி இனிதாதலின். மற்று : அசை. (50) 51. சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும் பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல் வரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கும் அரிது. (இ-ள்.)சிறந்தார்க்கு - நட்பிற் சிறந்தவர்களுக்கு, செறுதல் - தம் நண்பரைப் பிழை செய்தவழியுஞ் சினந்து நீக்குஞ் செயல்கள், அரிய - இலவாம்; பிறந்தார்க்கு - உயர் குடியிற் பிறந்த மேலோர்க்கு, எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், துணை துறந்து வாழ்தல் - தமக்குத் துணையான சுற்றங்களை நீங்கி இன்ப வாழ்வில் வைகும் வகைகள், அரிய - இல; வரைந்தார்க்கு - உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு, வகுத்து ஊண் - பிறர்க்குப் பகுத்தளித்து உண்ணு நிகழ்ச்சிகள், அரிய - இல; யார்க்கும் - ஈரநெஞ்சமுடையாரெவர்க்கும், இரந்தார்க்கு - தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு, ஒன்று - ஒரு பொருள், இல்என்றல் - இல்லையென்று மறுத்துக் கூறுதல், அரிது -இல்லை. (க-து.) சிறந்த நண்பர்கள் தம்மு ளொருவரையொருவர் சினந்து கொள்ளார்; உயர்குடிப்பிறப்பினர் தம்இனத்தாரை
|