நீங்கி வாழார்; தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர்; அருளுடையவரெல்லாரும்இரந்தார்க்கு இல்லையென்று சொல்லார். (வி-ரை.) ‘அரிய' வென்பது பலவின் முற்றானமையின், ‘செறுதல்' ‘வாழ்தல்' ‘உண்டல்' என்பவற்றிற்குப் பன்மைப் பொருள் உரைத்துக் கொள்க. ‘எஞ்ஞான்று' மென்பதை ஏனையவற்றிற்குங் கூட்டிப் பிழை செய்த காலத்தும், இடுக்கான காலத்தும், செல்வம் மிக்க காலத்தும், வறுமையுற்ற காலத்துமெனக் கருத்துரைத்துக் கொள்ளல் சிறப்பாகும். ஊண் : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். அருமை, ஈண்டு இன்மைமேற்று. ஞான்று : காலப்பொருளதாகிய இடைச்சொல். (51) 52. இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால் உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந் தன்னடைந்த சேனை சுடும். (இ-ள்.) இரை - உணவு, இன்பு உறா - பிணியினாற்றுன்பமுறும், யாக்கையுள் பட்டால் - வயிற்றிற் சேர்ந்தால், சுடும் - வருத்தும்; ஒண்மை இலாரை - அறிவு விளக்கம் இல்லாதவர்களை, உரைசுடும் - அவர் வாய்மொழியே அவரைத் துன்புறுத்தும்; ஒருவன் - ஒருவனது, வரை கொள்ளா - அறத்தின் எல்லையிற்படாத, முன்னை வினை - முன் செய்த தீவினை, சுடும் -இப்பிறப்பில் வந்து வருத்தும்; வரை கொள்ளா - அறத்தின் எல்லையிற் படாத, வேந்தனையும் - அரசனையும், தன் அடைந்த - தன்னைச் சேர்ந்த, சேனை - படைகளே, சுடும் -கொல்லும். (க-து.) பிணியுள்ள உடம்பிற் சேரும் உணவு செரியாமையாற் றுன்புறுத்தும்; அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும்; முன்செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும்; அறத்தின் வரையறையில் நில்லாதஅரசனைக் சேனைகளே கொல்லும். (வி-ரை.) அறிவென்பது விளக்கமுடைமையின் ‘ஒண்மை' யெனப்பட்டது. ‘ஒண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு' (புல்லறி, 4) என்பது திருக்குறள். வரைகொள்ளாவென்னுங் குறிப்பால் வினை தீவினைக்காயிற்று.வரைகொள்ளாவென்பதை
|