அரசனுக்குங் கூட்டுக. நீதிவழியில் நடத்தப்படாத சேனை அரசர்க்குத் தீங்கிழைக்குமென்பது. உம்மை இறந்தது தழீஇய எச்சம்.‘சேனையே' எனத் தேற்றேகாரம் விரித்துக்கொள்க. யாக்கை - ‘யா' பகுதி, ‘க' சந்தி, ‘கு' சாரியை, ‘ஐ' செயப்படு பொருண்மை விகுதி ; கட்டப்பட்டது என்பது பொருள். (52) 53. எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து சேர்தற் பொருள தறநெறி பன்னூலுந் தேர்தற் பொருள பொருள். (இ-ள்.) ஒருவனை - பிறனொருவனை; இகழ்தல் - இகழுஞ் செயல், எள்ளற் பொருளது - யாவராலும் நீக்குதற்குரியது; உறுதிச் சொல் - ஒருவன் கூறும் உறுதிச் சொல், உள்ளற் பொருளது - ஏற்றுக்கொள்ளுதற்குரியது; அறநெறி - அறவழி, உள் அறிந்து - ஒருவன் உள்ளத்தில் தெளிந்து, சேர்தற் பொருளது - அடைதற்குரியது; பொருள் - மெய்ப்பொருள்கள், பல்நூலும் - அமைவுடைய பல நூல்களையும், தேர்தற் பொருள -ஆராய்ந்து தெளிதற்குரியன. (க-து.) ஒருவனால் நீக்குதற்குரியது அவன் பிறரை இகழுஞ் செயல்; ஒருவன் ஏற்றுக்கொள்ளுதற்குரியது பெரியோர் கூறும் உறுதிச் சொல்; உண்மையறிந்து தெளிந்து கடைப்பிடித்தற்குரியது அறவழி; பலநூற்களையும் ஆராய்ந்து தேர்தற்குரிய பொருள்கள்மெய்ப்பொருள்களாம். (வி-ரை.) உள் - உள்ளம்.நூலும் : இரண்டாவது விரிக்க; உம்மை : முற்று.உறுதிச்சொல். அடையப்படும் நன்மையைத் தருஞ்சொல். உறு : பகுதி, த் : எழுத்துப்பேறு, இ : செயப்படு பொருண்மை விகுதி. (53) 54. யாறுள் அடங்குங் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின் வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை வேள்வியோ டொப்ப உள.
|