(இ-ள்.) யாறு - ஆற்று வெள்ளம், உள் அடங்கும் - தம்முட் புகுந்து அடங்கத்தக்க, குளம் உள - குளங்களும் நாட்டில் உள்ளன; வீறு சால் - சிறப்பு அமைந்த, மன்னர் விழையும் - அரசர்களால் விரும்பப்படும், குடிஉள - குடி மக்களும் உள்ளனர் ; தொல் மரபின் - பழைய முறைமையினையுடைய, வேதம் உறுவன - வேதக் கருத்துக்களைப் பொருந்துவவாகிய, பாட்டு உள - சில தனிப் பாட்டுகளும் உள்ளன; வேள்வியோடு ஒப்ப - வேள்விகளுக்கு நிகராவனவாகிய, வேளாண்மை உள - ஈகைகளும் உள்ளன. (க-து.) ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன; அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன : வேதக்கருத்துக்களையுடைய பழைய தனிப்பாட்டுகளும் உள்ளன : வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன. (வி-ரை.) ‘யாறுளடங்குங் குள' மென்றது, ஆற்று வெள்ளங்களும் புகுந்தடங்கத்தக்க அவ்வளவு அகலமும் ஆழமுங்கரைவலிமையுமுடைய குளங்களாகு மென்றற்கு. மன்னர் விழையுங் குடியாதல் - திருவினும் உருவிலும் பெருந்தகைமையிலுமென்க. தொன் மரபினென்றதுமேன்மையாகக் கருதப்பட்ட பழந் தமிழ் நான்மறைகளின் கருத்தமைந்த பழந்ததமிழ்த் தனிப் பாட்டுகளும் இஞ்ஞான்றுள்ளன வென்பது. வேள் ஆண்மை - இரப்போரது விருப்பத்தை ஆளுதலென்க : வேள் - விருப்பம். உறுவன : முற்றெச்சம். வேள்வியோடொத்த வேளாண்மையாவது - கைம்மாறு செய்ய வலியில்லாத நல்லோர்க்கு ஒருவன் தேடிச்சென்று கொடுக்கும் ஈகை. (54) 55. எருதுடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் ஒருதொடையான் வெல்வது கோழி - உருவோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்பசேனைச் செறிவுடையான் சேனா பதி. (இ-ள்.) எருது உடையான் - உழவு மாடுகளையுடையவன், வேளாளன் - வேளாளனாவான்; ஒரு தொடையான் - ஒரு காலால், வெல்வது - பெடையை வயப்படுத்துவதான; கோழி - சேவற் கோழியைப்போல, ஏலாதான் - எவர் பகையையும் ஏற்றுக் கொள்ளலின்றி யாவரையும்வயப்படுத்தி
|