ஒற்றுமையுடன் வாழ்பவன், பார்ப்பான் - பார்ப்பானாவான்; உருவோடு - உருவழகோடு, அறிவுடையாள் - வாழ்க்கையை நடத்தும் நல்லறிவு உடையவள், இல்வாழ்க்கைப் பெண் - இல்வாழ்க்கைக்கு உரிய துணைவி ; சேனை - தனது சேனையோடு, செறிவுடையான் - எஞ்ஞான்றும் ஒன்றுபட்டு உடனுறைதலுடையவன், சேனாபதி - சேனைத் தலைவனாவான்; என்ப -என்று பெரியோர் கூறுவர். (க-து.) உழவு மாடுடையவன் வேளாளன்; ஒருகாலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப்போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன்; அழகும் அறிவுமுடையவள் வாழ்க்கைத்துணை :சேனையோடு ஒன்று பட்டு உடனுறைபவன் சேனாபதி. (வி-ரை.) வேளாளனுக்கு உழவுக்கு இன்றியமையாதனவாதலால் எருதுடையான் என்றார். கோழி ஒரு காலாற்பெடையை நணுகி வயப்படுத்துவதென்பது நயங் காட்டுமாறாம்: அதையொப்பவே பார்ப்பானும் எவரோடும் பகையாமல் நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவா னென்க. சேனை செறிவுடையானென்றது, சேனையை விட்டு விலகா னென்றபடி; உடையான் முதலியன வினையாலணையும் பெயர்கள். உருவோடு - ஓடு: உடனிகழ்ச்சிப் பொருளது. சேனைச் செறிவுடையான் என்ற பாடத்துக்கு ஒற்றுமையுடைய மிக்க பெரிய சேனை என்க ஏலாதான் என்பதற்கு மிக்க பொருளாசையால் மானங்கெட ஏற்காதவன் எனவுரைப்பினுமாம். (55) 56. யானை யுடையார் கதனுவப்பர் மன்னர் கடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை அல்லார் உவப்பத கேடு. (இ-ள்.) யானை உடையார் - யானையையுடைய போர்த் தலைவர், கதன் உவப்பர் - அதன் சினத்தை விரும்புவர்; மன்னர் - அரசர், கடும் பரிமா - விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரையை, காதலித்து - விரும்பி, ஊர்வர் - அதன் மேலேறிச் செல்வர் ; கொடுங்குழை - வளைவான காதணியை யணிந்த, நல்லாரை - மங்கையர்பால், நாண் - நாணத்தை, நல்லவர் - நல்லியல்புடையவர்கள், உவப்பர் -
|