பக்கம் எண் :

55

பட்டது, அல்லது நிகழ்ந்தது என்க. புல்லறிவினார்பால் உட்கிடக்குந் தீமைகள் பல விருக்குமாகலின், உள் கரந்து பாம்புறையும் புற்றன்னராயினார். ‘கற்றன்னர் கற்றாரைக் காதல' ரென்பதைக் ‘கற்றன்னர் கற்றாரைக் காதவல' (74) ரென்று மேலுங் கூறுவர்.

(58)

 59. மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்
துறப்பார் துறக்கத் தவர்.

(இ-ள்.) மாண்டவர் - அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள்; மாண்ட வினை - மாட்சிமைப்பட்ட செயல்களை, பெறுப - செய்யப் பெறுவர்; வேண்டாதார் - அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள், வேண்டா வினையும் - தம்மால் வேண்டப்படாத தீவினைப் பயன்களையும், பெறுப -இம்மை மறுமைகளிற் பெறுவார்கள்; யாண்டும் - எப்பொழுதும், பிறப்பார் - மேற்பிறப்பிற் பிறப்பவர்கள், பிறப்பு ஆர் - அப்பிறப்பிற் பொருந்தும், அறன் - அறத்தையே, இன்புறுவர் - இருமையிலும் விரும்பி யின்புறுவர்; துறப்பார் - யான் எனதென்னும் பற்றைத் துறப்பவர்கள், துறக்கத்தவர் - வீட்டுலகத்திற்குரியவ ராவார்கள்.

(க-து.) அறிவான் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வாக்ள்; அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் தீவினைப் பயன்களையும் பெறுவார்கள்; உயர்ந்த பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பின் அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர்;பற்றைத் துறப்பவர்கள் வீட்டின்பத்துக் குரியராவார்கள்.

(வி-ரை.) மாண்டவர்: ஈறு திரிந்த வினையாலணையும் பெயர் : பெறுப : பல்லோர் படர்க்கை எதிர்கால வினைமுற்று.யாண்டும் - இடைநிலை விளக்காதலின் மற்றவற்றோடும் ஒட்டிப் பொருளுரைத்துக் கொள்க. துறக்கத்தவ ரென்றே உரிமைப் படக் கூறினார், அதுதிண்ணமாதலின்.

(59)

 60. என்று முளவாகு நாளும் இருசுடரும்
என்றும் பிணியுந் தொழிலொக்கும் - என்றும்