பக்கம் எண் :

56

 கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ்
சாவாரும் என்றும் உளர்.

(இ-ள்.) என்றும் - எக்காலத்தும், நாளும் - விண் மீன்களும், இரு சுடரும் - திங்களுஞ் சூரியனும், உளவாகும் - உள்ளனவாகும்; என்றும் - எக்காலத்திலும், பிணியும் - செயலுக்கு இடையூறான நோயும், தொழில் - உழவு முதலிய தொழில்களும், ஒக்கும் - உள்ளன ஆகும்; என்றும் - எக்காலத்திலும், கொடுப்பாரும் - இல்லையென்னாமல் ஈவாரும்,கொள்வாரும் - ஏற்பாரும், அன்னர் - உளராவர்; என்றும் - எக்காலத்திலும்;பிறப்பாரும் - பிறப்பவர்களும், சாவாரும் - இறக்கின்றவர்களும், உளர் -உளராவர்.

(க-து.) விண்மீன்களும் திங்களுஞ் சூரியனும் என்றும் உள்ளன; நோயும் முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உளர்; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உளர்.

(வி-ரை.) எனவே, இச்செய்யுள் உலகத்தின் இடையறாமை குறித்தவாறாம். ‘ஒக்கு' மென்பதை என்றும் உளவாதலொக்கு மென்றும், அன்னரென்பதை என்றும் உளவாகும் நாண்மீன் முதலாயின போல்வரென்றுங் கொள்க.தொழில் தலைமையால் உழுதொழில் முதலாயினவற்றைக் குறிக்கும். சுடர் : பண்பாகுபெயர்.தொழில் என்பதன் ஈற்றில் எண்ணும்மை தொக்கது.பிணி - பிணித்தல் என்னுந் தொழிலடியாகப் பிறந்த பெயர்;முயற்சி செய்யவொட்டாமற் கட்டுப்படுத்துவது என்பதுபொருள்.

(60)

 61. இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்
முனிதக்கா னென்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
1முனியா ஒழுக்கத் தவன்.

(இ-ள்.) இனிது உண்பான் என்பான் - இனிய உணவை உண்பவன் என்று சொல்லப்படுபவன், உயிர் கொல்லாது, உண்பான் -காய்கறியுணவுகளையே உண்பவ


(பாடம்) 1 முனியாத வுள்ளத்தவன்.