பக்கம் எண் :

57

னாவான்; முனிதக்கான் என்பான் - எல்லாரானும் வெறுக்கத் தக்கவனென்று சொல்லப்படுபவன், முகன் ஒழிந்து - முகமலர்ச்சி யில்லாமல், வாழ்வான் - கடுகடுப்பாய் வாழ்பவனாவான்; தனியன் எனப்படுவான் - துணையில்லாதவ னென்று சொல்லப்படுபவன், செய்த நன்று இல்லான் - தன்னாற் செய்யப்பட்ட நன்மையொன்று மில்லாதவனாவான்; இனியன் எனப்படுவான் - இனிமையானவனென்று சொல்லப்படுபவன், யார் யார்க்கேயானும் - எல்லோராலும், முனியா ஒழுக்கத்தவன் -வெறுக்கப்படாத ஒழுக்கத்தை யுடையவனே ஆவன்.

(க-து.) ஓருயிரையுங் கொல்லாமற் காய்கறி யுணவுகளை யுண்பவனே இனிய உணவை உண்பவனாவான்; முகமலர்ச்சி யில்லாமற் கடுகடுப்பாய் உயிர்வாழ்வோன் எல்லோரானும் வெறுக்கப்படுவான்; யார்க்கும் உதவி செய்யாதவன் துணையில்லாதவனாவான்;எவராலும் வெறுக்கத் தகாத ஒழுக்கத்தை யுடையவன் இனியவனென்றுசொல்லப்படுவான்.

(வி-ரை.) இனிது : குறிப்பு வினையாலணையும் பெயர். முனியத்தக்கான் என்பது முனிதக்கான் என நின்றது. செய்த நன்றில்லானென்பது நன்மை செய்தலில்லானென்னும் கருத்துடையதாகலின் அதற்கேற்பப் பொருளுரைத்துக் கொள்க.அடுக்குப் பன்மைப் பொருளது. கு. ஏ : சாரியைகள்.ஆன் : மூன்றன் உருபு.இதுபஃறொடை வெண்பா.

(61)

 62. ஈத்துண்பா னென்பான்இசைநடுவான் மற்றவன்
கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியா தானை இரவு.

(இ-ள்.) ஈத்து உண்பான்என்பான் - பிறர்க்கு கொடுத்துண்பவ னெனப்படுவான், இசை நடுவான் - உலகத்திற் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் - அங்ஙனம் கொடுத்துன்பவனது கைப்பொருளையும் பறித்துண்பவன், காங்கி எனப்படுவான் - அவாவுடைய னெப்படுவான்; நண்ணார் முன் - விரும்பாதவர் முன், சேறல் - ஒன்றை விரும்பியடைவது,தெற்ற நகையாகும் -