தெளிவாகவே இகழ்ச்சியுண்டாகும்; பாடு அறியாதானை - தனது தகுதியறியாதவனை, இரவு - இரந்து செல்லல், பகையாகும் -பகைமைக்கே இடமாகும். (க-து.) பிறர்க்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான்; அங்ஙனம் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்துண்பவன் அவாமிக்கவனாவான்' தன்னை விரும்பாதார்முன் தான் விரும்பிச் செல்லல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகும்.தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கிடமாகும். (வி-ரை.) ஈந்தென்பது ஈத்தென வலித்தது. மற்று பிறிதென்னும் பொருளது. ‘மற்றவன்' என்பதற்குப் ‘பிறனது' எனப் பொருளுரைப்பினும் ஆம். கைத்து - கையிலுள்ள பொருளென்க. காங்கியென்பது வெப்பத்தை உணர்த்துவதொரு சொல்லாதலின், இங்கு அவ்வியல்பினையுடைய அவாவினையுடையானென்னும் பொருட்டாயிற்று. யாதொரு முயற்சியுமின்றிப் பிறர் பொருளை அவாவி உயிர் வாழ்பவனென்பது பொருள். நகை - இங்கு இகழ்ச்சிப்பொருட்டு, பகை : தொழிற்பெயர் : பகு : பகுதி, ஐ : விகுதி, உகரக்கேடு : சந்தி.பாடு : முதனிலை திரிந்ததொழிலாகு பெயர். (62) 63. நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து வழுத்த வரங்கொடுப்பவர் நாகர் - தொழுத்திறந்து கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி நன்றூட்ட நந்தும் விருந்து. (இ-ள்.) நெருப்பு அழல் - வேள்வித்தீயின் சுடர், நெய் விதிர்ப்ப - நெய்யைச் சிந்த, நந்தும் - ஓங்கும்; நாகர் - தேவர்கள், சேர்ந்து வழுத்த - தம்மைப் பிறர் அணுகி ஏத்த, வரம் கொடுப்பர் - வேண்டும் நன்மைகளை அளிப்பர்; கறவை - ஆக்கள், தொழுத்திறந்து - கொட்டிலைத் திறந்து, கன்று ஊட்ட - கன்றுகளை உண்பிக்க, நந்தும் - பால் பெருக்கெடுக்கும்; கலம் பரப்பி - இலையை விரித்து, நன்று ஊட்ட - இனிமையாக உண்பிக்க, விருந்து நந்தும் - விருந்தினர்மனங்களிப்பர். (க-து.) நெய்யைச் சொரிய அழல் வளர்ந்தெரியும்: தம்மை வழுத்தினால் தேவர் நன்மை தருவர்; கன்றைஉண்பிக்க
|