பக்கம் எண் :

59

ஆன்பால் பெருகும்; இனிமையாய் விருந்தளிக்க விருந்தினர்மகிழ்வர்.

(வி-ரை.) விதிர்ப்ப - சிந்த; இஃதிப் பொருட்டாதல் ‘நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து' (188) என்னும் புறநானூற்றடியில் காண்க. நெய்யென்னுங் குறிப்பினால் நெருப்பு வேள்வித் தீயை யுணர்த்திற்று.நாகர், ஈண்டுத் தேவர்மேற்று.நந்தல் - மிகுதல்; இப்பொருள் கொண்டு தொடர்க்கேற்பக் கருத்துரைத்துக்கொள்க. அழல் - எழுவாயதலால் லகரம் திரியாது நின்றது. விதிர்ப்ப முதலிய செயவெனெச்சங்கள் காரணப்பொருளனவாதலால் இறந்தகாலத்துக் குரியன. கறவை; கற : பகுதி, வ்: சந்தி, ஐ: வினைமுதற் பொருண்மை. விகுதி. விருந்து : பண்பாகுபெயர். விருந்து - புதுமை.நன்றூட்டலாவது -அளவளாவுதல் செய்து உண்பித்தல்.

(63)

 64. பழியின்மை மக்களாற் காண்கவொருவன்
1கெழியின்மை கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற்
போற்றாதார் போற்றப் படும்.

(இ-ள்.) பழி இன்மை - ஒருவன் தான் பழிக்கப்படுதலில்லாமையை, மக்களால் காண்க - தன் மக்கட்பேற்றாற் கண்டு கொள்க; ஒருவன் கெழி இன்மை - ஒருவன் தனக்கு நட்புரிமை யில்லாமையை, கேட்டால் அறிக - தனக்குச் செல்வங் கெடுதலாற் கண்டுகொள்க; பொருளின் நிகழ்ச்சியால் - பொருள் வரவினால், ஆக்கம் அறிக - ஒருவன் தனது வளர்ச்சியைக் கண்டுகொள்க; புகழ்ச்சியால் - தான் பலரானும் புகழப்படும் புகழ்ச்சியினால், போற்றாதார் -பகைவராலும், போற்றப்படும் - ஒருவன்வணங்கப்படுவான்.

(க-து.) ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினாற் பழிக்கப்படுத லில்லாதவனாவான்; நட்பியல்புடையவனானால் அவனுக்குப் பொருட்கேடு உண்டாகாது.ஒருவனுக்குச் செல்வம் மேலு மேலும் பெருகிக்கொண் டிருக்குமானால் அதனால் அவனது முற்போக்குண்மை அறியப்படும்; பலரும் புகழும்படி ஒருவன் ஒழுகுவானாயின் அப்பெரும் புகழினாற் பகைவரும் அவனை வணங்குவர்.


(பாடம்)1 கெழுவின்மை.