பக்கம் எண் :

61

 66. திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு.

(இ-ள்.) திரி அழல் காணின் - திரியி னெரியுஞ் சுடரைக் கண்டால், தொழுப - அது சிறிதாயிருப்பினும் உலகத்தார்கைகூப்பி வணங்குவர்; விறகின் - விறகிலே, எரி அழல்காணின் - எரியுஞ் சுடரைக் கண்டால், இகழ்ப - அது பெரிதாயிருப்பினும் உலகத்தார் மதியாதிகழ்வர், ஒரு குடியில் - ஒரே குடும்பத்தில், கல்லாது - படியாமல், முத்தானை - ஆண்டு முதிர்ந்துவிட்டவனை, கைவிட்டு மதியாமல் விடுத்து, கற்றான் - படித்தவனது, இளமை - இளமைப் பருவத்தையே, உலகு பாராட்டும் - உலகத்தார் பாராட்டுவர்.

(க-து.) திரியி லெரியுஞ் சுடரைக் கண்டால் அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் தொழுவர் ; விறகி லெரியுஞ் சுடரை அது பெரிதாயிருப்பினும் தொழாது இகழ்வர் ; ஒரு குடும்பத்திலேயே படியாதவன் மூத்தவனாயினும் மதியார் ; படித்தவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டுவர்.

(வி-ரை.) திரி : தொழிலடியாகப் பிறந்த பெயர்; செயப்படு பொருண்மை விகுதி புணர்ந்து கெட்டது ; திரிக்கப்பட்ட தென்பது பொருள். கைவிட்டுப் பாராட்டு மென்பதைக் கைவிடும் பாராட்டுமென இரண்டாகப் பிரித்துக்கொள்க, நான்மணிக்கடிகையானமையின். ஒரு பொருளின் உருவத்தைப் பாராமல் அதன் இயல்பைக் கண்டே மதித்தல் வேண்டுமென்பது இப்பாட்டின் கருத்து. உலகு : ஆகு பெயர்.

(66)

 67. கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாந் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகிற் கெடும்.

(இ-ள்.) கைத்து உடையான் - கைப்பொருள் உள்ளவன், காமுற்றது - விரும்பிய பொருள், உண்டாகும் - கிடைக்கும்; நீர் உண்டேல். நீர்ப்பாய்சச லுண்டானால்;