பக்கம் எண் :

63

(க-து.) புலி ஊன் உண்டு இன்புறும்; ஆன் புல்லுண்டு இன்புறும்; கீழோர் சோறுண்டு இன்புறுவர்; மேலோர்மதிப்புணர்ந்து இன்புறுவர்.

(வி-ரை.) ‘நிறம்பெறூஉ' மென்னுங் குறிப்புக் கீழோர் விலங்கோடொத்து உடம்பையே வளர்ப்ப ரென்ப துணர்த்தும்; ‘வாயுணர்வின் மாக்கள்' என்றார் வள்ளுவரும்.அரிசி, கீழ், மேல் : ஆகுபெயர்.அளபெடைகள் :இன்னிசை நிறைப்ன.

(68)

 69. பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை - என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட் - கென்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் - தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை.

(இ-ள்.) பின் - தொடங்கிய பின்பு, அதிர்க்கும் - நடுங்கச் செய்யும்; செய்வினை - செய்தொழில்கள்; பின்ன ஆம் - முன் ஆராயாதார்க்குப் பின் தோன்றுவனவாம்; என் பெறினும் - எப்பயனைப் பெறுவதானாலும், முன்னம் - தொடங்குவதற்கு முன்னமேயே, அறிந்தார்கட்கு - பின் வருவனவற்றை ஆராய்வார்க்கு, முன்ன ஆம் - அவை முன்தோன்றுவனவாம்; அடைந்தார்க்கு - ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு, உள்ளம் - அவர்கள் உள்ளம், என்னும் - எப்படியாயினும், அவா ஆம் - மேலு மேலும் அவாவுடையதாகும், அவா இலார் - எப்பொருளினும் பற்றில்லாத பெரியோர்கள், செய்யும் வினை - செய்யும் அறச் செயல்கள், தவா ஆம் -கெடாவாம்.

(க-து.) ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பங்கள் தொடங்கியபின் தெரியும்; ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கு முன்னமேயே தெரியும்;ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு அதன்கண் எப்படியாயினும் பற்றுண்டாகும்; எப்பொருளினும் பற்றில்லாதவர்கள் செய்யுஞ் செயல்கள் ஒருபோதுங்கெடமாட்டா.

(வி-ரை.) எனவே, பற்றுள்ளவர்கள் செய்யும் அறச்செயல்கள் பயன்படா வென்பதாயிற்று. பின்ன, முன்ன வென்பன குறிப்புவினை முற்றுக்கள். அவாவா மென்பதில் ஆம் செய்யுமென்னு முற்று; ஏனைய அசைகள். ‘என்னும் என்பது எப்படியாயினு மென்றற்கு; ‘போமினென வென்னு முரையீயான்' (சுர