71. மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன் முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப் 1புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு வானம் உரைத்து விடும். (இ-ள்.) மகன் - புதல்வன், தந்தை நலத்தை - தன் தந்தையின் நன்மையை, உரைக்கும் - தனது நல்லியல்பினாற் பிறர்க்கறி விப்பான்; ஒருவன் முகம் - ஒருவனது முகம், உள்நின்ற வேட்கை - நெஞ்சினுள் உள்ள விருப்பத்தை, உரைக்கும் - பிறர்க்குத் தனது குறிப்பினா லறிவிக்கும்; அகல் - அகன்ற, நீர்ப்புலத்து இயல்பு - நீரால் விளையும் வயலின் இயல்பை, புக்கான் உரைக்கும் - அந் நிலத்துக்குரியான் அறிவிப்பான்; நிலத்து இயல்பு - உலகத்தாரியல்பை, வானம் உரைத்துவிடும் - மழையின் நிலை அறிவித்து விடும். (க-து.) தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பினால் அறிவிப்பான்; ஒருவனது நெஞ்சிலுள்ள விருப்பத்தை அவன் முகக் குறிப்பே அறிவித்துவிடும்; வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்துவிடுவான்; நிலத்து மக்கள் இயல்பை அந்நிலத்துப் பெய்யு மழையின் நிலைஅறிவித்துவிடும். (வி-ரை.) முகன் : போலி. நிலக்கிழவன் அதன்கண் நாடோறுஞ் சென்று பார்ப்பவனாதலால், ‘புக்கான்' எனப்பட்டான்.நிலத்தியல்பு - நிலத்து மக்களி னியல்பு. முகனுரைக்கும், வான முரைத்துவிடு மென்பன ‘கேட்குந போலவு' மென்பதனான் முடிக்க. ‘பிலத்தியல்பு' என்ற பாடத்துக்குப் பெரிய ஆழமுள்ள மடுவென்க. நிலம், வானம் : ஆகுபெயர்கள். நிலத்தியல்பு - மக்கள் நல்லோர் தீயோர் என்பது. மகனுரைக்குந் தந்தை நலத்தை - பழியின்மை மக்களாற் காண்க என்றனர் கீழும்.நல்லோர் - பொருட்டே மழை பெய்யுமாதலின் வான முரைத்துவிடும் எனப்பட்டது. (71) 72. பதிநன்று பல்லார் உறையின் ஒருவன் மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்
(பாடம்)1 பிலத்தியல்பு.
|