பக்கம் எண் :

66

 ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்துங் குடி.

(இ-ள்.) பல்லார் உறையின் - பலரும் நிறைந்து ஒத்து வாழ்வார்களானால், பதி நன்று - ஊர் நன்றாகும் ; மாசு அறக் கற்பின் - குற்றமறும்படி கற்பனாயின், ஒருவன் மதி நன்று - ஒருவனது அறிவு தெளிவுபெறும்; இனநிரை - ஆனிரைகள், நுதி மருப்பின் - கூரிய கொம்புகளையுடைய, ஏற்றான் - எருதுகளால், வீறு எய்தும் - சிறப்படையும்; தான் கொடுக்கும் - தான் ஏழைகட்குக் கொடுக்கும், சோற்றான் - உணவினால், குடி - தான் பிறந்த குடி, வீறு எய்தும் - பெருமையடையும்.

(க-து.) பலரும் நிறைந்து ஒத்து உறைவாரானால் ஊர் நன்றாம்; ஒருவன் ஐயந்திரிபறக் கற்பானானால் அவன் மதி நன்றாகும்; ஆனிரைகள் கூர்ங்கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருந்தலால் சிறப்படையும்; ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும்.

(வி-ரை.) பல்லாரென்றதை ஈண்டு முயற்சியு மெர்ற்றுமையுமுடைய நன்மக்கள் பல்லாரென்று கொள்க; அவர் அல்லாராயின் ஊர் நன்றாகாது சோம்பும். கல்வி கற்றற்குக் குற்றமாவன ஐயந் திரிபுகள்; ஏற்றுக்கு நுதிமருப்பென்று அடைவந்தமையின் ஏற்றான் வீறெய்து மென்றவிடத்து வீறு வெற்றியெனக் கொள்க. பின்வந்த வீறு சிறப்பெனப் பொருள்படும். சோற்றோடு உடையெனவுங்கொள்க.

(72)

 73. ஊர்ந்தான் வகைய கலினமா - நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட 
குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு.

(இ-ள்.) கலின மா - கடிவாளம் பூண்ட குதிரைகள்; ஊர்ந்தான் வகைய - அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக் கொத்தன; அறம் செய்கை - அறச்செயல்கள், நேர்ந்த ஒருவன் - இசைந்த ஒருவனது, ஆற்றல் வகைய - ஆற்றலைப் பொறுத்தன; தூம்பின் அகலங்கள் - நீர்க்