காலின் பரப்புக்கள், தொட்ட - தோண்டப்பட்ட, குளத்து அனைய - குளங்களின் அளவின; வாழ்வார் வழக்கு - இல் வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள், தத்தம் வளத்து அனைய - அவரவரது வருவாய்ச் செழுமையையொத்தன. (க-து.) குதிரைகள், சவாரிசெய்வானது திறத்துக் கொத்தன; ஒருவனுடைய அறச்செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன; நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச்செழிப்பை ஒத்தன. (வி-ரை.) வகைய: தொழிற் பெயரடியாகப் பிறந்த குறிப்புவினைமுற்று.நேர்ந்த வென்னும் பெயரெச்சம் ஈறுதொக்கு நேர்ந்தென நின்றது. அனை - அத்தனை யென்பதன் மரூஉ வென்ப. குளங்களின் அளவுக்கேற்கவே நீர்செல்லும் நீர்க்கால்கள் அவற்றிற் கமைக்கப்பட்டிருக்கு மென்க. தூம்பு - நீர் வெளியே இழியும் நீர்க்கால்; மதகு, கலங்கல் முதலியனவுமாம். கலினம் - கடிவாளம். தொடுதல் - தோண்டுதல்.தூம்பு - உட்டுளை. (73) 74. ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - 1தாழியாத் 2தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் வெஞ்சொலா லின்புறு வார். (இ-ள்.) ஊழியும் - ஊழிக்காலமும், யாண்டு எண்ணி - ஆண்டுகளா லெண்ணி யாத்தன - அளவு செய்யப்பட்டன; யாமமும் - யாமக்காலமும், நாழிகையானே - நாழிகைகளானே, நடந்தன - அளவு செய்யப்பட்டுக் கழிந்தன; தாழியா - காலந் தாழாமல், தெற்றென்றார் கண்ணே - தெளிந்தவரிடத்தில், தெளிந்தனர் - அறிவுடையா ரெல்லாம் ஐயந் தெளிந்தனர்; வெட்கென்றார் - அறிவிலாதார், வெம் சொலால் - பிறரைக் கொடுமை கூறும் செவ்விய சொற்களாலேயே, இன்புறுவார் -சொல்லிச் சொல்லி இன்புறுவார்கள். (க-து.) ஊழிகள் யாண்டுகளாற் கணக்கெண்ணி அளவு செய்யப்பட்டுக் கழிந்தன;யாமமும் நாழிகையால் வரையறுக்க
(பாடம்) 1 தாழ்வியா. 2 வெற்றென்றார்.
|