பக்கம் எண் :

68

பட்டுக் கழிந்தன; அறிஞர் தெளிந்தார்மாட்டுக் காலந்தாழாமல் ஐயந்தெளிந்தனர்;அறியாதார் பிறரை வெஞ்சொற் கூறி மகிழ்ந்தனர்.

(வி-ரை.) ஊழிகளும் யாமங்களுமாகக் கணக்குச்செய்து காலம் விரைந்து கழிதலால் அறிஞர்கள் காலந்தாழாமல் தெளிந்தாரை நண்ணி ஐயந் தீர்ந்தனர்; காலத்தினருமை யறியாதார் பிறரை நிந்தைகூறி வீண்காலங் கழிப்பரென்பது அறிதற்குரியபொருள்; ‘வடுச்சொல் நயமிலார் வாய்த்தோன்றும்' - என்பர் முன்னும்.தாழீயா தென்பது தாழாதென்க.ஈண்டது ஈறு தொகுத்தலாய் எச்சப்பொருள் பயந்து நின்றது; ‘நெடுநகரரசு துயிலீயாது' (22) என்னும் பதிற்றுப்பத்திலும் உரையாசிரியர், துயிலீயா தென்பது துயிலா தென்னும் வினைத் திரிச்சொல் : துயிலாமலெனத் திரிக்க' வென்றுரைத்தமையுங் காண்க. ஆண்டு : யாண்டு என்பதன் மரூஉ. வெளிறு - அறிவின்மை. வெட்கு -வெளிறு.

(74)

 75. கற்றான் தளரின் எழுந்திருக்குங் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
1பொய்யாவித் தாகி விடும்.

(இ-ள்.) கற்றான்தளிரின் - கல்வியறிவுடையவன் ஒன்றில் இழுக்கலுறுவானாயின், எழுந்திருக்கும் - அவன் எப்படியாயினும் உய்தி பெறுவான்; கல்லாத பேதையான் - படியாத அறிவிலான், வீழ்வானேல் - இடையிற் றளருவானானால், கால் முரியும் - முயற்சி கெட்டு அழிவான்; ஒருமை - ஒரு பிறப்பில்; தான் செய்த எல்லாம் - தான் செய்தனவெல்லாம்; கருவி - மறுபிறப்பினுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; எண்ணின் - ஆராயுமிடத்து, தெரிவு - மெய்யுணர்வு, பொய்யா வித்து ஆகிவிடும் - வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

(க-து.) கல்வியறிவுடையவன் தளர்வானேல் எப்படியானும் உய்வான்; கல்லாத பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான்;எவர்க்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின்


(பாடம்) 1 வீயாவித்தாகி.