நுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; மெய்யுணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும். (வி-ரை.) கல்வியறிவினாற் கற்றான் மீள எழுவான்; அஃதில்லாமையாற் பேதை வீழ்வானென்பது கொள்க. காலென்றது ஈண்டு வீழாமைக்குரிய முயற்சி; வீழ்வா னென்னும் உருவக வினைக்கேற்பக் காலென்றும் முரியுமென்றும் முயற்சி கெடுதல் கூறப்பட்டதென்க.செய்தவெல்லா மென்று கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க. செய்த : பலவின் படர்க்கை இறந்தகால வினையாலணையும் பெயர்.ஆகிவிடும் என்பன துணிவுப்பொருட்டு : பொய்யாவித்து : எச்சத் தொடராகவும்,பண்புத்தொகையாகவும் பொருள் கொள்ளலாம். (75) 76. தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர் கற்றாரைக் காத லவர். (இ-ள்.) புலவரும் - கல்வியறிவுடைய புலவர்களும், தேவர் அனையர் - தேவருக்கு ஒப்பாவார்கள், ஓர் ஊர் உறைவார் - அப்புலவர்கள் உள்ள ஊரில் வாழ்பவர்கள்; தேவர் தமர் அனையர் - அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவார்கள்; தமருள்ளும் - அவ்வாறுறைந்து உறவானாருள்ளும், பேணி வழிபடுவார் - அப் புலவரை விரும்பி வழிப்பட்டவர்கள், பெற்றன்னர் - அவர் தம் அருள் பெற்றாரை யொப்பர்; கற்றாரைக் காதலவர் - புலவரைக் காதலித் தொழுகுவார், கற்றன்னர் -அப்புலவரை யொப்பக் கற்றவரேயாவர். (க-து.) புலவர்கள் தேவரை யொப்பர்; அவரூரிலுறைவார் அவருறவினரையொப்பர்; அவருள்ளும் பேணி வழிபடுவார் அவருள் பெற்றாரை யொப்பர் ;காதலித் தொழுகுவார் அக் கற்றாரையே யொப்பர். (வி-ரை.) புலவர் பண்படியாகப் பிறந்த பெயர்; தமர், பொருளடியாகப் பிறந்த பெயர். பேணி வழிபடுவார் பொதுவான மாந்தரெனவும், காதலவர் சிறப்பான மாணாக்க ரெனவுங் கொள்க. பெற்றன்னர் கற்றன்னர் என்பன பெற்றாலன்னர் கற்றாலன்னரென விரியும். கற்றன்னர் கற்றாரைக் காதலவர் (56) என
|