பக்கம் எண் :

71

 கண்ணினால் காண்ப அணியவற்றைத்தொக்கிருந்து
எண்ணினான் எண்ணப் படும்.

(இ-ள்.) இனியதை - சுவைக்கினியதை, நாக்கின் அறிப - நாவாற் சுவைத்தறிவார்கள்; எல்லா மலர்களும் - எல்லா மலர்களையும், மூக்கினான் - மூக்கினால், மோந்து அறிப - யாவரும் மோந்தறிவார்கள்; அணியவற்றை - காட்சிக்கு அழகான பொருள்களை, நோக்கு உள்ளும் - பார்வை யுண்டென்று கருதப்படும், கண்ணினால் காண்ப - கண்ணாற் பார்ப்பார்கள்; தொக்கு இருந்து - அறிஞர்கள் கூடியிருந்து, எண்ணினான் - அறிவினால், எண்ணப்படும் -உணர்ச்சிகள் ஆராயப்படும்.

(க-து.) சுவைக்கினியதை யாவரும் நாவினாற் சுவைத்தறிப; மலர்மணங்களை மூக்கினால் மோந்தறிப; அழகிய பொருள்களைக் கண்ணினாற் காண்ப; உணர்வருங் கருத்துக்களைஅறிஞர் ஒன்று கூடியிருந்து அறிவானாராய்ப.

(வி-ரை.) காட்சிப் பொருள்களைக் கண் முதலிய ஐம்பொறிகளாலும், கருத்துப் பொருள்களை அறிவின் ஆராய்ச்சியாலும் மக்கள் தெரிந்து கொள்வர் என்பது கருத்து. இன்னென்னும் ஐந்தனுருபும், ஆனென்னும் மூன்ற னுருபுகளும் ஏதுவுங் கருவியுமாகும். நாப்பயன் முதலிய மூன்றுங் கூறினமையின் ஏனை மெய்ப்பயன் செவிப்பயன்களையுந் தழுவிக்கொள்க.தொக்கிருந்து தென்பதன் உண்மை அறியற்பாற்று. எண்ணப்படுமென்பதற்கு உணர்வுகள் அவாய்நிலையான் வருவிக்கப்படும். தொக்கிருந்து, இரு; பகுதிப்பொருள் விகுதி.

(78)

 79. சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - 1மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

(இ-ள்.) பிறந்த உயிரெல்லாம் - பிறந்த உயிர்களெல்லா வற்றுள்ளும், சாவாத இல்லை - இறவாதன இல்லை; வலிகளும் - வலிமைகளும், தாவாத இல்லை -


(பாடம்)1. மூவா விளமை.