பக்கம் எண் :

72

கெடாதன இல்லை; மூவாது - எஞ்ஞான்றும் மூத்திடாமல், இளமை - இளமையை, இசைந்தாரும்இல்லை - நிலையாய்ப் பொருந்தினாரும் இல்லை; வளமையில் - செல்வத்தில், கேடின்றி - குறைதலில்லாமல், சென்றாரும் - எஞ்ஞான்றுஞ் செல்வராய் ஓங்கினவரும், இல் -இல்லை.

(க-து.) உலகத்தில் இறவாத உயிர்களும் இல்லை; கெடாத வலிமைகளுமில்லை; மூவாத இளமைகளுமில்லை;குறையாத செல்வங்களுமில்லை.

(வி-ரை.) எனவே, உள்ளபோதே அறஞ்செய்க வென்பதாம். சாவாத, தாவாத என்பன பலவின் படர்க்கை வினையாலணையும் பெயர்கள். தா - கெடு. உயிரெல்லாம், வலிகளுமென்றவற்றிற்கு ஏழாவது விரித்துக்கொள்க.வலிகளென்பதை அறிவுவழி முதலான எல்லாவற்றுக்கும் உரைக்க. கேடென்றது, இங்கே குன்றுதல்: மூவாது - இது குச்சாரியை பெற்று ‘மூக்காது' எனவும் வரும். கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

(79)

 80. சொல்லான் அறிப வொருவனை - மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை - மெய்க்கண்
மகிழான் அறிப நறா.

(இ-ள்.) ஒருவனை - ஒருவனுடைய நன்மை தீமைகளை, சொல்லான் - அவன் கூறுஞ் சொற்களாலேயே, அறிப - அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள்; மடுவினை - மடுவின் மட்பொரு ளின்மையை, மெல்லென்ற - மென்மையான, நீரான் அறிப - நீரினா லறிவார்கள்; சான்றாண்மை - ஒருவனது பெருந்தகைமையை, யார்கண்ணும் - யாரிடத்தினுங் காட்டும், ஒப்புரவின் - ஒருபடியான நன்மைத் தன்மையினால்; அறிப - அறிவார்கள்; நறா - கட்குடியை, மெய்க்கண் - (குடித்தானது) உடம்பின்கண், மகிழான் அறிப - களிப்புக்குறிகளானறிவார்கள்.

(க-து.) ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினாலேயே அறிப; மடுவின் மண்ணினிமையை அதன் தெளி நீரினா