பக்கம் எண் :

73

னறிப; பெருந்தன்மையை யார்மாட்டும் ஒப்பநடக்கும் நடுவுநிலைமையா னறிப; கட் குடியைமெய்க்களிப்பானறிப.

(வி-ரை.) மெல்லென்ற : ஒரு சொல்; அஃதீண்டுப் பண்புப் பொருண்மை குறித்தது; தெளிநீ ரென்பது கருத்து; தெளிநீரால்லாதது தடித்துக் குழம்பா யிருக்குமாதலி னென்க. மகிழ் - காரணவாகுபெயர். நறா - நறாக்குடியை யுணர்த்திற்று.உம்மை - முற்று.

(80)

 81. நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் 1வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்குந் துணிபு.

(இ-ள்.) நா - பதறிப்பேசும் நாக்கு, நட்பு அறுக்கு மன்றோ - நேசத்தைக் கெடுக்குமன்றோ; வீங்கிப் பிணிப்பின் - வற்புறுத்துக் கட்டாயப்படுத்தினால், தேற்றம் இல் பேதை - தெளிவில்லாத அறிவிலி, விடுமன்றோ - நற்செய்கையையுங் கை விடுமன்றோ; பல நூல் வலையின் - பல அறிவு நூல்களென்னும் வலையினால், அவா - அதன்கண் அகப்பட்ட நன்மாணாக்கரது தீய அவா, படுமன்றோ - கெட்டொழியுமன்றோ; மாறுள் - பகைமைக்கண், நிறுக்கும் துணிபு - ஒருவன் வைக்குந் துணிவெண்ணத்தால், கெடுமன்றோ -அவன் விரைவிற் கெட்டுவிடுவானல்லனோ?

(க-து.) பதறிய நாக்கினால் நட்புக் கெடும்; கட்டாயப் படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்கள் நற்செய்கைகளைக் கைவிடுப; நூல்களைப் பயிறலால் மாணாக்கர்க்கு அவாக்கெடும்; பகைமைக்கட் டுணிவுநிறுத்துதல் அங்ஙனம் நிறுத்துவானுக்கே கேடாம்.

(வி-ரை.) வீங்கிப் பிணிப்பின், மிக்குக் கட்டாயப்படுத்தினால், மாணாக்கன் அறிவுநூல் வலையி னகப்படுத்தலால், அவன் அவாக் கெடுமென்க. அளபெடை செய்யுளிசை நிறைக்க வந்தது. அவா, மாறு : முதனிலைத் தொழிற்பெயர்கள். இனித் ‘தேற்றமில்......... பிணிப்பின்' என்பதற்குப் பேதை துனபுறுத்தி இறுகப் பிணிப்பின் கைப்பொருளைக் கைவிடுவான் எனவும் மிக்க நட்பினாற் கட்டின்பேதை நட்பை விடுவான் எனவும்பொருள் கொள்


(பாடம்)1. வலையினடுமன்றோ.